பழுகாமத்தில் இடம்பெற்ற கௌரவிப்பு விழா

மட்டு பழுகாமத்தின் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பாராட்டு விழாவானது கடந்த 08.04.2015 அன்று வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. இவ்விழாவில் அதிபர் சேவை தரம் 1 இற்கு பதவி உயர்வான பாடசாலை அதிபர் திரு.சு.உதயகுமார் அவர்களுக்கு பாராட்டு விழா இடம்பெற்றது. இதன் போது தவணைப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கை வழங்கல் நிகழ்வில் கோட்டக்கல்விப்பணிப்பாளர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
அதிபர் சு.உதயகுமார் அவர்கள் கடந்த 25 ஆண்டுகாலமாக கல்வி சேவையில் தன்னை அர்ப்பணித்து தற்போதும் அதிபர் சேவையில் பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் சேவையாற்றி வருகின்றார்.
இவர் 1990ம் ஆண்டில் இருந்து மட்/மண்டூர் 39 அ.த.க. பாடசாலையில்  ஆசிரியராக பின் அப்பாடசாலையிலே அதிபராகவும் 2003ம் வரை சேவையாற்றினார். அதிபர் நியமனத்திற்கு 2000ம் ஆண்டு உள்வாங்கப்பட்டார்.
பின்னர் 2003 இல் இருந்து 2009 வரையும் மட்/மண்டூர் 40 அ.த.க.பாடசாலையில் கட்மையாற்றி  பலரின் வேண்டுகோளுகிணங்க தனது ஊரில் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு 2009 - இன்று வரையும் பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் அதிபராக சேவையாற்றி வருகின்றார். கடந்த மாதம் கொழும்பிலே கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற விழாவில் கலந்து கொண்டு அதிபர் சேவை தரம் 1 இற்கான பதவி உயர்வினை பெற்றுக்கொண்டார். இவரை பாடசாலைச் சமூகம் பாராட்டி கௌரவிக்கின்றது.