சுவிஸ் உதயத்தினால் சாதனையாளர்கள் பாராட்டு விழா சம்பந்தமான கலந்துரையாடல்

(எம்.ஏ.றமீஸ்)
மண்டூர்-04, அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் சாதனையாளர்களை பாராட்டிக் கௌரவிக்கும் வைபவத்திற்கு சுவிஸ்உதயம் அமைப்பினால் அனுசரணை வழங்கவது சம்பந்தமான விஷேட கலந்தரையாடல் அதிபர் எஸ்.புஸ்பராசா தலைமையில் வித்தியாலய கேட்போர்கூடத்தில இடம்பெற்றது.


இந்நிகழ்வின்போது சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர்  கே.துரைநாயகம், கிழக்கு உதயம் அமைப்பின் தலைவரும் ஓய்வு நிலை பிரதிக் கல்விப்பணிப்பாளருமான எம்.விமலநாதன், கிழக்கு உதயம் அமைப்பின் உபதலைவரும் ஓய்வு நிலை அதிபருமான கலாபூஷணம் பாவாணர் அக்கரைப்பாக்கியன், வித்தியாலய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பாதுகாவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளரும் பிரபல சமூக சேவையாளருமான கே.துரைநாயகம் குறிப்பிடுகையில், பாடசாலைகளில் பரிசளிப்பு விழாக்கள் நடத்தப்படுவது ஏனைய மாணவர்களையும் பல்துறைகளிலும் ஊக்குவிக்க காரணியாக அமையும். அந்த வகையில் ,ப்பாடசாலையில் உள்ள திறமை மிகு மாணவர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பாராட்டிக் கௌரவிக்கப்படாமல் உள்ளனர் என்பதை இப்பாடசாலையின் அதிபர் எமக்கு அறியத் தந்திருந்தார்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காய் செயற்பட்டு வரும் எமது அமைப்பினரோடு இப்பாடசாலை அதிபர் இவ்விடயம் சம்பந்தமாக கோரிக்கை விடுத்திருந்தார். அவ்விடயத்தினைக் கருத்திற்கொண்டு  இப்பாடசாலைக்கு நேரடியாக வருகை தந்து பார்த்தபோதுதான்  இங்குள்ள குறைபாடுகள் மற்றும் தேவைப்பாடுகள் புலனாகின்றது. இந்நிலைமையினை எமது சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் டி.சுதர்சன், செயலாளர் வே.ஜெயக்குமார் மற்றும் உறுப்பினர்களுடன் உடனடியாகத் தெரியப்படுத்தியதும் அவர்களும்  இவ்விடத்திற்கென உதவியளிப்பதற்கு  இணக்கம் தெரிவித்தனர். குறிப்பாக எமது அமைப்பின் தலைவர் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் எம் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக பல தியாகங்களுக்கு மத்தியில் பல்வேறான உதவிகளை செய்து வருவதை நாம்  இந்த  இடத்தில் ஞாபகப்படுத்துவது நல்லதென நினைக்கின்றேன்.

இப்பாடசாலையில் பாட மற்றும்  இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் திறமை காட்டிய மாணவர்களைப் பாராட்டிக் கௌரவித்தல், மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தன்னலம் பாராமல் சொந்த லீவு பெறாமல் சேவையாற்றும் ஆசிரியர்கள் போன்றோரை பாராட்டிக் கௌரவிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுங்கள்.
சுவிஸ் உதயம் அமைப்பு  இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள வறுமை நிலை மாணவர்களின் கல்வி நடவடிக்கை மீது மிகுந்த அக்றையும் ஆர்வமும் கொண்டு செயற்படுகின்றது. கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக அறப்பணியாற்றி வரும் எமது அமைப்பினர் எதிர்வரும் ஜுன் மாதமளவில் இப்பாடசாலை நிருவாகத்தினால் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள் பரிசளிப்பு விழாவின் அனைத்து செலவுகளுக்கும் அனுசரணை வழங்குவதற்காக திட்டமிட்டுள்ளோம். அந்த வகையில்  இவ்விழாவின்போது எமது அமைப்பின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்காகத் திட்டமிட்டுள்ளோம். அதற்கு எல்லாம் வல்ல  இறைவன் நல்லருள் வழங்க வேண்டும் என்றார்.