மட்டுநகரில் 'மாநகர சவால் கிண்ணத்திற்கான' மாபெரும் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டி

 (கௌரீசன்) மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் 'நம்பிக்கை ஒளி' எனும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் அமைப்பினதும் அதன் தாயக நிறுவனமான 'இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளை'யினதும் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் உள்ளடங்கும் ஏ பிரிவு கழகங்கள் பங்குபற்றும் மாபெரும் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டி எதிர்வரும் 02.05.2015 ஆந் திகதி தொடக்கம் மட்டுநகர் பாட்டாளி புரம் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

மாநகர சவால் கிண்ணத்திற்கான மாபெரும் லீக் முறையிலான கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியாக இது நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள்ளடங்கும் 09 ஏ பிரிவுக் கழகங்களும் மாநகரசபையினைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மாநகர பொழுது போக்குக் கழக அணியுமாக மொத்தம் 10 அணிகள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றவுள்ளன.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடும், போட்டியிடும் அணிகளை நிரல்படுத்தும் வைபவமும் நேற்று (25.04.2015) மாலை மாநகர சபையின் சபா மண்டபத்தில் மாநகர ஆணையாளர் திரு.மா.உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ்வைபவத்தில் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையின் தலைவர் திரு.எஸ்.சிவகாந்தன் அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் தலைவர் திரு.எஸ்.உதயராஜ் அவர்களும் சங்க நிருவாகிகளும், போட்டியில் கலந்துகொள்ளும் ஏ பிரிவு கழகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.

இச்சுற்றுப் போட்டியானது இரு குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் முதலில் புள்ளி வழங்கலுக்கான போட்டிகள் நடைபெற்று அதில் முதலாம் இரண்டாமிடங்களைப் பெறும் அணிகள் தெரிவானதன் பின்னர் அரையிறுதிப் போட்டிகள் விலகல் முறையில் இடம்பெற்று இறுதிப் போட்டிக்குரிய அணிகள் தெரிவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிணங்க முதலாமிடத்தைப் பெறும் அணிக்கு ஒரு இலட்சம் ரொக்கப் பணமும் வெற்றிக் கிண்ணமும், இரண்டாமிடத்தைப் பெறும் அணிக்கு ஐம்பதாயிரம் ரொக்கப்பணமும் வெற்றிக் கிண்ணமும் பரிசாக வழங்கப்படவுள்ளதாகவும் மற்றும் இறுதிப் போட்டியில் தெரிவு செய்யப்படும் சிறந்த வீரருக்கு ஐயாயிரம் பணப்பரிசும் சிறந்த கோல் காப்பாளருக்கு ஐயாயிரம் பணப்பரிசும், தொடரின் சிறந்த வீரருக்கு ஐயாயிரம் பணப்பரிசும், மற்றும் ஒவ்வொரு போட்டியிலும் தெரிவாகும் சிறந்த வீரருக்கு ரூபா 1500 பணப்பரிசும் கிண்ணங்களும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

துண்டு குலுக்கலூடக அணிகள் குழுவாகப் பிரிக்கப்பட்ட போது ஏ குழுவில் யங்ஸ்டார்,கோல்ட்பிஸ்,டிஸ்கோ,மைக்கல்மேன்,கதிரொளி ஆகிய கழகங்களும் வி குழுவில் மாநகரசபை அணி, புனித இக்னேசியஸ்,கோட்டைமுனை,பாடுமீன்,கடல்மீன் ஆகிய கழகங்களும் தெரிவாகியுள்ளன.

இதனடிப்படையில் எதிர்வரும் 02.05.2015 ஆந் திகதி நடைபெறவுள்ள ஆரம்ப வைபவத்தினையடுத்து முதலாவது போட்டியில் யங்ஸ்டார் அணியும் கோல்ட்பிஸ் அணியும் போட்டியிடவுள்ளன.

இச்சுற்றுப் போட்டி மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் சுற்றுப் போட்டிக் குழுவின் ஒழுங்கமைப்பில் அதன் விதிமுறைகளுக்கிணங்க நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்