மட்டக்களப்பு மாவட்டக் கால்பந்தாட்டச் சங்கத்தினைப் பொறுப்பேற்றுள்ள புதிய நிருவாகத்தின் துரிதமான ஏற்பாட்டினால் 2015 ஆம் வருடத்திற்கான கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் இன்று (22.04.2015) இருதயபுரம் ஈஸ்டன் ஸ்டார் மைதானத்தில் கால்பந்தாட்டச் சங்கத்தலைவர் திரு.எஸ்.உதயகுமார் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முதல் கட்டமாக வி பிரிவு கழகங்களுக்கிடையிலான லீக் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்றைய போட்டியில் முகத்துவாரம் லைற்கவுஸ் கழக அணியை எதிர்த்து பெரிய உப்போடை புனித ஜோசப் கழக அணியினர் போட்டியிட்டனர் இதில் 2:1 எனும் பேறுகளினால் முகத்துவாரம் லைற்கவுஸ் கழக அணி வெற்றி பெற்றுள்ளது.
பின்வரும் அட்டவணைப்படி தொடர்ந்து போட்டிகள் இருதயபுரம் ஈஸ்டன் ஸ்டார் மைதானத்தில் மாலை 3:30 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
23.04.2015 – ரெட்ணம் எதிர் சிறி கிருஸ்ணா
24.04.2015 – சிவானந்தா எதிர் சண்பிளவர்
27.04.2015 – லெவண் ஸ்டார்; எதிர் சிவனொளி
28.04.2015 – யங்சோல்யஸ்; எதிர் விபுலானந்தா
29.04.2015 – ஜிந்தா பாத் எதிர் கோப்றா
30.04.2015 – லைற்கவுஸ் எதிர் சண்றைஸ்
01.05.2015 – ஸ்ராலியன் எதிர் ஜீவஒளி
04.05.2015 – சிறி கிருஸ்ணா எதிர் விபுலானந்தா
05.05.2015 – யங்சோல்யஸ்; எதிர் ரெட்ணம்
06.05.2015 – கோப்றா எதிர் லெவண்ஸ்டார்
07.05.2015 – சிவானந்தா எதிர் ஸ்ராலியன்
08.05.2015 – சண்றைஸ்; எதிர் இனிக்கோ
11.05.2015 – ஜீவஒளி; எதிர் சண்பிளவர்
12.05.2015 – யங்சோல்யஸ்; எதிர் சிறிகிருஸ்ணா
13.05.2015 – லெவண் ஸ்டார் எதிர் ஜிந்தாபாத்
14.05.2015 – கோப்றா எதிர் சிவனொளி
15.05.2015 – சண்றைஸ் எதிர் புனித ஜோசப்
18.05.2015 – சிவானந்தா எதிர் ஜீவஒளி
19.05.2015 – இனிக்கோ எதிர் லைற்கவுஸ்
20.05.2015 – சண்பிளவர்; எதிர் ஸ்ராலியன்
21.05.2015 – சிவனொளி;; எதிர் ஜிந்தாபாத்
22.05.2015 – இனிக்கேர்; எதிர் புனித ஜோசப்
25.05.2015 – ரெட்ணம்ஸ்;; எதிர் விபுலானந்தா













