
உலக சுகாதார தினத்தினை முன்னிட்டு நேற்று (07.04.2015) மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் ஆசிரியப் பயிலுனர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகஸ்தர்கள், ஊழியர்களினால் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் வளாகத்தை துப்பரவு செய்யும் சிரமதான நிகழ்வு நடைபெற்றது.
கல்லூரியின் பீடாதிபதி எஸ்.ராஜேந்திரம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வினை மாவட்ட வைத்திய அதிகாரி Dr. திருமதி. M.சுரேந்திரன் நெறிப்படுத்தியிருந்ததுடன் உப பீடாதிபதி எஸ்.ஜெயக்குமார் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





.jpg)












