கிழக்கில் ஆயிரத்து பதினொரு ஆசிரிய ஆளணி வெற்றிடம்

கிழக்கு மாகா­ணத்தில் உள்ள மாகா­ணப்­பா­ட­சா­லை­களில் தரம் ஒன்று தொடக்கம் தரம் பதி­னொன்று வரை­யு­மான வகுப்பு பிரி­வு­களில் கற்­பிக்க ஆங்­கிலம், கணிதம், விஞ்­ஞானம், இரண்­டாம்­மொழி சிங்­களம், சித்­திரம், தகவல் தொழில்­நுட்பம் உள்­ளிட்ட பல பாடங்­க­ளுக்கு ஆயி­ரத்து பதி­னொரு ஆசி­ரிய ஆளணி வெற்­றிடம் உள்­ள­தாக மத்­திய கல்வி அமைச்சு
 வெளி­யிட்­டுள்ள புள்ளி விப­ரத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதற்­க­மைய விஞ்­ஞான பாடம் கற்­பிக்க 60 ஆசி­ரி­யர்­களும் கணிதம் கற்­பிக்க 80 ஆசி­ரி­யர்­களும் ஆங்­கிலம் கற்­பிக்க 200 ஆசி­ரி­யர்­களும் சித்­திரம் கற்­பிக்க 200 ஆசி­ரி­யர்­களும் இரண்டாம் மொழி, சிங்­களம் கற்­பிக்க 200 ஆசி­ரி­யர்­களும் தகவல் தொழில்­நுட்பம் கற்­பிக்க 75 ஆசி­ரி­யர்­களும் விவ­சாயம் கற்­பிக்க 45 ஆசி­ரி­யர்­களும் கீழைத்­தேச சங்­கீதம் கற்­பிக்க 15 ஆசி­ரி­யர்­களும் மேலைத்­தேய சங்­கீதம் கற்­பிக்க 05 ஆசி­ரி­யர்­களும் நாட­கமும் அரங்­கியல் கற்­பிக்க இரு­பது ஆசி­ரி­யர்­களும் வியா­பார முகா­மைத்­து­வமும் கணக்­கீடும் கற்­பிக்க 20 ஆசி­ரி­யர்­களும், விசேட கல்வி கற்­பிக்க 06 ஆசி­ரி­யர்­களும், நடனம் கற்­பிக்க 20ஆசி­ரி­யர்­களும் மனைப்­பொ­ரு­ளியல் கற்­பிக்க 10 ஆசி­ரி­யர்­களும் வடிவமைப்பு தொழில்நுட்பம் கற்பிக்க 6 ஆசிரியர்களும் பரதநாட்டியம் கற்பிக்க 05 ஆசிரியர்களும் தேவையென குறிப்பிடப்பட்டுள்ளது.