காட்டு யானைகளின் அச்சுறுத்தல்கள் அதிகரித்தள்ள நிலையில் அதனை விரட்டும் நடவடிக்கை

மட்டக்களப்பு போரதீவுப் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்கள் அதிகரித்தள்ள நிலையில் அதனை தடுக்கும் வகையில் யானைகளை விரட்டும் நடவடிக்கை ஒன்றினை வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் முன்னெடுக்கபட்டது.




 இதன் போது முப்பத்தைந்தாம் கிராம கன்னியம்மை காட்டு பிரதேசத்தில் காணப்பட்ட யானைகளே  விரட்டப்பட்டது.
படுவான் கரை பிரதேசத்தில் அண்மைக் காலமாக காட்டு யானைகள் அட்டகாசம் செய்து உயிரிழப்புக்களையும், சொத்துச் சேதங்கள் ஏற்படுத்திவந்தது, இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் காட்டு யானைகளை விரட்டுமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை பிரதேச செயலகம் முன்பாக அண்மையில் நடாத்தியிருந்தனர்.

 ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய  வனஜீவராசிகள் திணைக்களத்தினால் குறித்த பிரதேசத்தில் இருந்து காட்டு யானைகளை விரட்டுவதாக ஆர்ப்பாட்டக்காரரிடம் உறுதியளிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாகவே இந்த நடவடிக்ககை முன்னெடுக்கப்பட்டதாக குறித்த நடவடிக்கைக்கு தலமை தாங்கிய மட்டக்களப்பு வனஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்.சுரேஸ்குமார் தெரிவித்தார்.

இதன் போது யானை விரட்டும் நடவடிக்கைக்கு திணைக்கள அதிகாரிகள் தயாரன நிலையில் சம்பவ இடத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகம்(ஜனா) அவர்கள் வருகைதந்து அவர்களை உற்சாகப்படுத்தி நின்றதுடன், யானைகள் கூடுதலான நடமாட்டம் உள்ள பிரதேசங்களையும், இதனை முற்றாக விரட்டுவதற்கு அரசியல் ரீதியான உதவிகள் எவ்வாறு அமையவேண்டும் என்பதையும், தினைக்கள உத்தியோகத்தர்களின் குறை நிறைகளையும் இதன் போது கேட்டறிந்து கொண்டார்…..