(அஸ்லம் எஸ்.மௌலானா)கல்முனை நகர சந்தைக் கட்டிடத் தொகுதியில்இன்று திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் 12 சிறிய ரக கடைகள் எரிந்து சேதமடைந்துள்ளன.
கல்முனை மாநகர சபை தீயணைப்பு படையினர் மேற்கொண்ட தீவிர முயற்சி காரணமாக தீ மேலும் பரவாமல் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கல்முனை நகர சந்தைக் கட்டிடத் தொகுதியின் ஒரு பகுதியில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக இன்று மாலை 3.45 மணியளவில் தீ பரவ ஆரம்பித்துள்ளது.
இத்த்தகவல் அறிந்து விரைந்து செயற்பட்ட கல்முனை மாநகர சபை தீயணைப்பு படையினர் சுமார் ஒரு மணித்தியால நேரம் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கு கல்முனைப் பொலிசாரும் வர்த்தகர்களும் ஒத்துழைப்பு வழங்கியதுடன் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் ஆகியோர் களத்தில் நின்று தீயணைப்பு நடவடிக்கையை நெறிப்படுத்தியிருந்தனர்.
கல்முனை நகர சந்தைக் கட்டிடத் தொகுதியில் சுமார் 500 பெரிய கடைகளும் ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறிய கடைகளும் இயங்கி வருகின்றன.
தீயணைப்பு நடவடிக்கை தாமதமடைந்திருந்தால் நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகியிருக்கும் என்பதுடன் தமக்கு கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)










