அம்பாறை, பொத்துவில் பொலிஸ் பிரிவுக்;குட்பட்ட கோமாரி கடற்கரைப் பிரதேசத்தில் 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆழ்கடல் மீன்பிடி உபகரணங்கள், இனந்தெரியாதவர்களினால் நேற்று செவ்வாய்க்கிழமை (07) நள்ளிரவு எரிக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோமாரி -02ஆம் பிரிவைச்சேர்ந்த சிங்கநாயகம் ராஜ்குமார் என்பவரின் மீன்பிடிப்படகுக்கான இயந்திரம்-01 (மோட்டார்), 800 லீற்றர் மண்ணெண்ணெய் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி வலைகள் 02 என்பன கோமாரி கடற்கரைப் பிரதேசத்திலுள்ள மீன்பிடி வாடியில் வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால் உபகரணங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவித்த பொத்துவில் பொலிஸார், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். -