ஈஸ்ட் லகூன் ஹொட்டலில் நடந்தது என்ன?

மட்டக்களப்பு ஈஸ்ட் லக்கூன் ஹொட்டலில் நடந்தது என்ன?
கடந்த 08 ஆந் திகதி ஹொட்டலின் 503 ஆம் இலக்க அறையில் தங்கியிருந்த  தம்பதியினர் இரவு 10.00 மணிக்கு அறையில் உள்ள குளியலறையில் இருந்து வெளியில் வந்த போது யாரோ ஓடிச் சென்றதாகவும் இது  தம்பதியினரை வீடியோ படம் எடுக்கும் முயற்சியென குறித்த தம்பதியினர் தெரிவித்ததாகக்கூறி குறித்த ஹொட்டலுக்கு எதிராக பல குற்றச் சாட்டுக்களை முன்வைத்து இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இச் செய்தி தொடர்பாக 503 இலக்க அறையில் தங்கியிருந்தவர்களை நாம் வினவியபோது, 

அவர்கள் இவ்வாறு எதுவும் நடக்கவில்லையென்றும் தாம் எந்தவொரு இணையத்தளத்திற்கும் செய்தி வழங்கவில்லையெனவும் தெரிவித்தனர்.


ஹோட்டல் உரிமையாளரை தொடர்பு கொண்டபோது
அவர் இவ்வாறு தெரிவித்தார்,
இது தொழில் ரீதியாக திட்டமிட்டு சுமர்த்தப்பட்ட முற்றிலும் பொய்யான ஒரு குற்றச்சாட்டு, இப்பிரதேசத்தில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் துணிந்து இம்முதலீட்டினை செய்து மிகவும் கண்னியமாகவும் சிறப்பாகவும் ஹொட்டலை நடாத்தி வருகின்றேன். இதனை விரும்பாத சிலரின் வேலையாகவே நான் இதனைக் கருதுகின்றேன். இது எனது ஹொட்டலுக்கு மட்டுமல்ல மட்டக்களப்பு பிரதேசத்திற்கே இழுக்கினை ஏற்படுத்தும் செயலாகும். இச் செய்தினை வெளியிட்ட பொறுப்பற்ற ஊடகத்திற்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்துள்ளேன் பொலிசார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். மிக விரைவில் இதன் சூத்திரதாரிகள் யாரென தெரிய வருவார்கள் எனத் தெரிவித்தார்.

நாம் இது தொடர்பாக பொலிசாரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

ஹொட்டல் உரிமையாளரின் முறைப்பாட்டிக்கிணங்க விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் கூறினர். குறித்த இணையத்தளச் செய்தியில் சம்பவம் நடைபெற்ற போது 119 அவசர அழைப்புக்கு  தம்பதியினர் தெரியப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளதே என பொலிசாரிடம்; கேட்ட போது அவ்வாறான அழைப்பு எதுவும் அவ்வேளையில் எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தனர். ஹோட்டல் உரிமையாளரைத்தவிர வேறும் யாரும் இச் சம்பவம் தொடர்பாக தங்களிடம் முறைப்பாடு செய்துள்ளனரா என வினவியபோது இல்லையென பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாரின் விசாரணைகள் நிறைவுற்றதும் அது தொடர்பான தகவல்களை நாம் மீண்டும் அறியத்தருவோம்.