(குளத்தூர் ரவி) குறிஞ்சாமுனையில் இன்பாலயா என்னும் பெயரில் முதியோர் பகல் பராமரிப்பு நிலைய திறப்பு நிகழ்வானது காவிய சுய அபிவிருத்தி பெண்கள் நிலையமும், சமுக அபிவிருத்தி நிலையமும் (CCD UK) இனைந்து முதியோர்களை சமூகத்தில் மேன்மைப்படுத்தும் முகமாகவும் அவர்களை பெருமைப்படுத்தும் முகமாகவும் திருமதி யோகமலர்-அஜித்குமார் (நிறைவேற்றுப் பணிப்பாளர் காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிலையம்) அவர்களது தலைமையில் 10.04 அன்று நடந்தது.இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளர் S.ரங்கநாதன் அவர்களும், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் S.சுதாகர் அவர்களும், உதவிப் பிரதேச செயலாளர் அவர்களும், மற்றும் வர்த்தக சம்மேளன நிறைவேற்று அதிகாரி K.குகதாஸ் அவர்களும், வண. போதகர் சாம்.சுவேன்திரன் அவர்களும், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் K.சத்தியநாதன் அவர்களும், மட்டக்களப்பு மேற்குப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் G.சிறிநேசன் அவர்களும், மற்றும் இவ் விழாவின் கதாநாயகர்களான முதியோர்கள் பலருடன் கிராம மக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்புச் சேர்த்து இருந்தனர்.



















