கல்குடா கல்வி வலய கோறளைப்பற்று கோட்டமட்ட தமிழ் தினப்போட்டி நிகழ்வுகள்


( நித்தி) மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட கோறளைப்பற்று  கோட்டமட்ட தமிழ் தினப்போட்டி நிகழ்வு இன்று (28) செவ்வாய்கிழமை கோட்டக்கல்விப் பணிப்பாளர் குணலிங்கம் தலைமையில் கிரான் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

 நிகழ்வுக்கு கல்குடா கல்விவலய பணிப்பாளர் ஸ்ரீகிருஸ்ணராஜா, கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், நடைபெறும் போட்டிகளுக்கு தீர்புக்களை தீர்மானிக்கும் நடுவர்கள் மற்றும் போட்டிகளுக்காக வருகைதந்த மாணவர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.