கராத்தே கலையில் சாதனைகள் புரிந்தவருக்கு சாமஸ்ரீ தேசகீர்த்தி விருது வழங்கி கௌரவிப்பு

இலங்கை அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் 25வது வருட தேசிய விருதுவழங்கல் நிகழ்வுகடந்த 18.04.2015 அன்று வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனைசேனைக் குடியிருப்பை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வதிவிடமாகவும் கொண்ட பொறியியலாளரும், சோட்டோகான் கராத்தேகலை ஆசானுமாகிய சௌந்தரராஜா முருகேந்திரன் (கறுப்புப்பட்டி4 Dan JKMO Japan/)  அவர்கள் கராத்தேகலைசார்பில் அடைந்த சாதனைகள் மற்றும் அர்ப்பணிப்பின் அடிப்படையில் “சாமஸ்ரீ தேசகீர்த்தி”எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை கணேச மகா வித்தியாலயம், மற்றும் கார்மேல் பற்றிமாகல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராகிய இவர் 2003 ஆம் ஆண்டு மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் தனது பட்டப்படிப்பினை நிறைவு செய்தவர்.


ஜப்பான் கராத்தேமரு யோசிக்காய் அமைப்பின் (JKMO)சிரேஷ்ட பயிற்றுவிப்பாளரான சென்சி. எஸ். முருகேந்திரன் சர்வதேச மற்றும் தேசியதரப்படுத்தலில் கறுப்புப்பட்டி4 Dan  இல் தகைமைபெற்றிருப்பதோடு,தேசிய Referee  மற்றும் Judge தரப்படுத்தலில் விசேட தேர்ச்சி பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறுவயதுமுதலே கராத்தே கலையில் ஆர்வம் கொண்டிருந்த போதிலும் அதனை முறையாகக் கற்கும் வாய்ப்பு 1995 ஆம் ஆண்டே இவருக்குகிட்டியது. இலங்கை கராத்தே சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான காலஞ்சென்ற சிகான். கே. இராமசந்திரன் (Black Belt  8 Dan)அவர்களின் செம்மையான வழிகாட்டல்களும்,நெறிப்படுத்தல்களுமே இவரது உயர்வுக்கு வழிகோலின. மேலும் ஜப்பான் கராத்தே மருயோசிக்காய் அமைப்பின் தாபகராகிய சிகான். Toshiatsu Sasaki (Black Belt 9 Dan) அவர்களிடம் ஆண்டுதோறும் பயிற்சிகளைப் பெற்றதோடு காலத்திற்குகாலம் சர்வதேச ரீதியில் கராத்தேகலையில் வல்லுனர்களாக விளங்கும் பலநாடுகளையும் சேர்ந்த சிரேஷ்ட ஆசான்களிடம் பயிற்சிகளையும், நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறுபட்ட கராத்தே போட்டிகளிலும் பங்குபற்றி வெற்றியீட்டிய இவர் ஆசானாக தன்னை அர்ப்பணித்து அடைந்த சாதனைகள் அதிகமானவை. 2003 முதல் கொண்டு இன்றுவரை இவரது மாணவர்கள் ஏறக்குறைய 173 பதக்கங்களைப்பெற்றுசாதனைபடைத்துள்ளனர். இதில் 98 தங்கப்பதக்கங்களும், 40 வெள்ளிப்பதக்கங்களும், 35 வெண்கலபதக்கங்களும் அடங்கும்.

இவரது சிரேஷ்ட மாணவரும் சகோதரரும் ஆகிய எஸ். பாலுராஜ் 2014ல் புதுடெல்லியில் இடம்பெற்ற தென்னாசியகராத்தே சுற்றுப்போட்டியில் தங்கப் பதக்கத்தைவென்று முதன்மை வீரராக சாதனை படைத்துள்ளார். அத்தோடு 2013, 2014, 2015 களில் இடம்பெற்ற தேசியமட்ட கராத்தே சுற்றுப்போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்களை பெற்றுக் கொண்டதோடு மூன்று முறைபு Grand Champion  விருதினையும் தனதாக்கியிருந்தார். இதன் விளைவாகசென்சி. எஸ். முருகேந்திரனுக்கு 2014ம் ஆண்டிற்கான சிறந்த பயிற்றுவிப்பாளருக்கான நினைவுசின்னம் வழங்கப்பட்டமையும் நினைவு கூறத்தக்கது.

எமதுகிழக்கிலங்கையில் கராத்தேகலையில் தன்னைஅர்ப்பணித்துசாதனைபடைத்துவரும் நல் ஆசானாகிய சாமஸ்ரீ தேசகீர்த்திசென்சி. எஸ்.முருகேந்திரனை நாமும் வாழ்த்துவோம்.