(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள முறக்கொட்டான்சேனையில் வீடொன்று எரிந்து அதில் வசித்த பெண்ணும் தீயினால் கருகி மாண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
முறக்கொட்டான்சேனை சேர்மன் வீதி எனும் முகவரியில் வசித்து வந்த சாமித்தம்பி கமலேஸ்வரி (வயது 33) என்ற இரு பிள்ளைகளின் தாயே தீயினால் கருகி இறந்துள்ளார்.
திங்கள் இரவு சுமார் 7 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் அடுக்களையுடன் கூடிய பகுதி தீயினால் எரிந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் இது பற்றிய மேலதிக விசாரணைகளைத் தொடர்வதாகக் கூறினர்.
நீதிவானின் பரிசீலனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.