(சமி) மட்டக்களப்பு வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணிக் பகுதியில் மறைத்து நடப்பட்டிருந்த பத்து கஞ்சாச்செடிகள் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைப்பற்றப்படடுள்ள சம்பவம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் தும்பங்கேணிக்கிராமத்தில் விவசாயி ஒருவர் தான் செய்யும் கொச்சித்தோட்டத்தில் மறைமுகமாக இரண்டரை உயரமுடைய ஒரு தொகுதி கஞ்சாச்செடிகளை வளர்த்துவந்தநிலையில் பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து அவ்விடத்தை சுற்றி வளைத்த பொலிசார் கஞ்சாச்செடிகளை கைப்பற்றியதுடன் அதனனை வளர்த்து வந்த தோட்ட உரிமையாளரையும் கைதுசெய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட விவசாயி களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் ஆஜபடுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்













