திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தம்

 (கதிரவன் )
வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம், இன்று திங்கட்கிழமை (20) காலை 7.30 மணியளவில்  பாபநாசம் தீர்த்த சுணையில் நடைபெற்றது.

மாதுமை அம்பாள் சமேத கோணேஸ்வரபெருமான் பக்தர்கள் புடைசூழ தீர்த்தசுனைக்கு எழுந்தருளி வருவதையும் சிவாச்சாரியார்கள் தீர்த்தோற்சவத்துக்கான கிரியைகளை மேற்கொள்வதையும் பக்தர்கள் தீர்த்தமாடுவதையும் படங்களில் காணலாம்.