(சிவம்)அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு வலுவடைந்து வருகின்றது இதற்கு சான்றாக பொருளாதாரம் குன்றிய பயனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக அவர்களின் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் சான்று பகிர்கின்றன என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
சூழலுக்கு தீங்கு விளைவிக்காத கூரைத்தகடுகளை விருத்தி செய்யும் முகமாக உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு அம்பாரை நவகம்புரவில் நேற்று புதன்கிழமை (27) தொழிற்சாலையொன்று திறந்து வைக்கப்பட்டது.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க அபிவிருத்தி நிறுவகம் ( யுஎஸ்எயிட்) மற்றும் பில்டிங் சொலிசன் பிரைவேட் லிமிட்டட் என்பன இணைந்து ரூபாய் 80 மில்லியன் செலவில் நிர்மாணிப்பட்ட தொழிச்சாலையை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் பதில் தூதுவர் அலிசன் அரியஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் மேலும் கூறுகையில்
எதிர்காலத்தில் தொடர்ச்சியான இரு நாடுகனுளுக்குமான உரையாடல்கள் மற்றும் இது போன்ற தொழில் வாண்மை பொருந்திய பங்களிப்புகள் என்பவற்றை மேலும் எதிர் பார்ப்பதாகவும்,
துருப்பிடிக்காத இரும்புக் கூரைகள், கொட்டகைகள் அமைப்பதற்கான விசேட இயந்திரங்களை நிறுவியதோடு ஆற்றல், திறன் போன்றவற்றில் பயிற்சிகளையும் மற்றும் நிபுணத்துவத்தையும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க அபிவிருத்தி நிறுவகம் ( யுஎஸ்எயிட்) வழங்கியுள்ளது மட்டுமல்லாமல் நூற்றுக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்பக்களையும் வழங்கியுள்ளது எனக் கூறினார்.
ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் பதில் தூதுவர் அலிசன் அரியஸ் கூறுகையில்
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக தேர்ச்சிக்கான ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் மற்றும் அமெரிக்க மக்களின் பங்களிப்புக்கான சிறந்த உதாரணமாக இத் தொழிற்சாலை அமையப்பெற்றுள்ளது. இது வெற்றிக்கு உதாரணமாகும்.
கிழக்கு மாகாணத்தில் வளர்ந்துவரும் விசேட தொழித்;துறைக்கேற்ப மீள் சுழற்சிக்குரிய புதிய கூரைத் தகடுகள் அமைந்திருக்கும். இதன் உற்பத்திகள் சூழலை நேசிக்கும் முறைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இவ் உற்பத்தியானது சக்தி விரையத்தினைக் குறைத்து கழிவுகளை 100 வீதம் மீள் சுழற்சிக்குட்படுத்தப்படும்.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள பகுதிகளில் சிறு தொழில் சார்ந்து முயற்சிகளுக்கு நிதி, தொழில் நுட்பம், முகாமைத்தவம் வழங்கி வரும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க அபிவிருத்தி நிறுவகம் ( யுஎஸ்எயிட்) இன் வெகா விஷ் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இத் தொழில் திட்டங்களுக்கு உதவி அளிக்கப்படுகின்றன எனத் தெரிவித்தார்.
![]() |
| Roofing Products Equipment: The state-of-the-art Building Solutions facility is equipped with specialized machinery to make corrugated steel roofing and silos. |














