மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் இதயங்களை இணைக்கும் அறக்கட்டளை அமைப்பும் இணைந்து நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு மாநகர ஆணையாளர் திரு.மா.உதயகுமார் அவர்களின் தலைமையில் 02.05.2015 அன்று பி.ப 3.30 மணியளவில் பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.சாள்ஸ் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.
இச்சுற்றுப்போட்டியில் மாநகர சபை எல்லைக்குட்பட்ட 09 கழகங்களும் மாநகர சபையினை பிரதிநிதிப்படுத்தும் அணியும் சேர்த்து மொத்தமாக 10 அணிகள் பங்குபற்றவுள்ளன. மேலும் 23 போட்டிகள்கொண்ட இச்சுற்றுப்போட்டியில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த வீரருக்கான பணப்பரிசும் கேடயமும், 1ம் இடத்தைப் பெற்று வெற்றியீட்டும் அணிக்கு ரூபா 100,000.00 ரொக்கப்பணமும் வெற்றிக்கிண்ணமும் 2ம் இடத்தைப் பெற்றுக்கொள்ளும் அணிக்கு ரூபா 50,000.00 ரொக்கப்பணமும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.













