மேற்படி வீட்டுத் திட்டம் சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் உதவியினால் ஒவ்வொரு வீடும் தலா ஏழு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவுமதிப்பீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ளன.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பல கிராமங்கள் கடந்தகால யுத்தத்தினால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. அவைகளில் இவ் பேரில்லாவெளி கிராமமும் ஒன்றாகும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும் கிராமங்களையும் மீள கட்டியெழுப்பும் மனிதாபிமான வேலைத் திட்டத்தின்கீழ் மிக வறுமை நிலையில் உள்ள 28 குடும்பங்களுக்கு ரூபா.30,160,000 செலவு மதிப்பீட்டில் 28 வீடுகள் நிர்மாணிப்பதற்கு அடிக்கல் வைக்கப்பட்டது.
சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ரீ. மயூரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன், சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் சுபாஷி திஸாநாயக்க, கிரான் பிரதேச செயலாளர் கே.தனேஸ்வரன், சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் திட்ட இணைப்பாளர் கே.பிரசாத் உள்ளுட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சுவீடன் கூட்டுறவு நிலையத்தினால் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களை மீளக் கட்டியெழுப்பும் நோக்குடன் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் கற்பகக்கேணி, கரடிப்பூவல், உன்னிச்சை ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கரடியன்குளம்,களுவன்கேணி போன்ற கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்ட மக்களுக்கு இதேபோன்று வீட்டுத்திட்டம் வழங்கிவைக்கப்பட்டதனை குறிப்பிடலாம்.




















