எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் நோக்கோடு கன்னங்குடா மகா வித்தியாலய மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு நேற்று திங்கட்கிழமை (25) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
தற்போது இலங்கையில் அதிகரித்து வரும் பாலியில் நோய் தொடர்பாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் எயிட்ஸ் கட்டப்பாட்டு மருத்துவப் பிரிவினரால் நடாத்தப்பட்ட இச் செயலமர்வில் குறித்த பாடசாலையின் தரம் 10 க்கு மேல் கல்வி பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் சுக நேய நிலையப் பொறுப்பாளர் வைத்தியக்கலாநிதி எஸ். அனுஷா நோய்த் தாக்கங்கள், நோய் பரவும் முறைகள், நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள் பற்றி விளக்கமளித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எச்.ஐ..வி. எயிட்ஸ் நோய் தொற்றினால் இதுவரையில் அண்ணளவாக 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் சுக நேய நிலைய பொதுப் பரிசோதகர் எம். தயாளன், வவுணதீவு. நாவற்காடு சுகாதாரப் பிரிவின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பி. முருகதாஸ் பாடசாலை உப அதிபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்












