மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு

(சிவம்) சர்வதேச தாதியர் தினத்தை  முன்னிட்டு கல்வியில் சிறந்த அடைவு மட்டத்தைப் பெற்ற தாதியர்களின் பிள்ளைகள் மற்றும் ஓய்வு பெற்ற தாதியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு   ஞாயிற்றுக்கிழமை (20)  மட்டக்களப்பு போதனா வைத்திசாலை மண்டபத்தில் நடைபெற்றது.



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஜி. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதலில் தாதியர் ஸ்தாபகி பிளரன்;ஸ் நைற்றிங்கேலின்  உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து தீபம் ஏற்றப்பட்டது.

இந்நகழ்வில் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட ஒருவர், க. பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ பெற்ற இருவர், 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 11 பேர்கள் கெரவிக்கப்பட்டதோடு தாதிய மாணவர்களின் கலை நிகழ்வுளும் இடம்பெற்றன.

போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் எல்.எம். நவரட்ணராஜா, கிழக்குப் பலகலைக் கழக தாதிய பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்சகோதரி கலாநிதி ஜே. ஜோசப்பா, திறந்த பல்கலைக் கழக தாதிய பீடத்தின் ஆலோசகர் கே. அலோசியஸ் ஆகியொர் கலந்து கொண்டனர்.

தாதியர் வாரத்தை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை (07) மற்றும் சனிக்கிழமைகளில் (08) தாதிய மாணவர்களால் இரத்த தானம் செய்ததோடு வெள்ளிக்கிழமை (09) தாதிய மாணவர்களுக்கு செயற்கை முறையில் இருதயம், நுரையீரல் மீண்டும் செயற்பட வைப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.