சுவாமி விபுலானந்தா பிறிமியர் லீக் சுற்றுப் போட்டியில் ரிதம் அணியினர் சம்பியன்

(சிவம்)

சுவாமி விபுலானந்தா பிறிமியர் லீக் - 2015 வெற்றிக் கிண்ணத்திற்கான கிரிக்கட்  சுற்றுப் போட்டியில் 63 ஓட்டங்களைப் பெற்று ரிதம் அணியினர் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நெறிகள் நிலையத்தினால் 3 ஆம் வருட மாணவர்களிடையே நடாத்தப்பட்ட அணிக்கு 8 பேர் கொண்ட 5 ஓவர்களைக் கொண்ட இச்சுற்றுப் போட்டியில் நிறுவகத்திலுள்ள 6 அணிகள் பங்கு பற்றிய சுற்றுப்போட்டி   வியாழக்கிழமை (21) கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.


இதில் எலிவேசன் அணியினர் 33 ஓட்டங்களைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு; தெரிவு செய்யப்பட்டனர்.

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நெறிகள் நிலையத்தின் பதில் பணிப்பாளர் கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ், முன்னாள் பணிப்பாளர் கலாநிதி எம். பிரேம்குமார், உதவிப் பதிவாளர் ரி. விஜயகுமார், கிழக்கப் பலகலைக் கழக விளையாட்ட ஆலொசனை சபையின் தவிசாளர் எம். ரவி ஆகியொர் கலந்து கொண்டு வெற்றிக் கின்னங்களை வழங்கி வைத்தனர்.

கடந்த வருடம் -2014 இல் சுவாமி விபுலானந்தா பிறிமியர் லீக் - 2015 கிறிகக்ட் கூற்றுப் போட்டி ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.