தென்னந்தோப்புக்குள் கஞ்சாச் செடிகளை கச்சிதமாக வளர்த்த காவலாளி கைது

(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )
தென்னந்தோப்புக்குள் கஞ்சாச் செடிகளை கச்சிதமாக வளர்த்த காவலாளி ஒருவரை திங்களன்று தாம் கைது செய்திருப்பதாக மட்டக்களப்பு போதைப் பொருள் தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர், ஸக்காத் கிராமத்துக்கு அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் காவலாளியாகக் கடமையாற்றும் 26 வயதுடைய றம்ழான் முஹம்மது ஷியாம் என்பரே கைது செய்யப்பட்டவராகும்.
மட்டக்களப்பு போதைப் பொருள் தடுப்பு புலனாய்வுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு;ள்ளார்.
தோப்பு உரிமையாளருக்கு தெரியாத வண்ணமே இவர் கஞ்சாச் செடிகளை வளர்த்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.