மட்டக்களப்பு விசேட குற்றப் புலன் விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும் முன்னாள் ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமாகிய அருண் தம்பிமுத்து இன்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா முன்னிலையி; ஆஜர் படுத்தப்பட்ட போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு விசேட குற்றப் புலன் விசாரணைப் பிரிவு பொலிஸாரிடம் செய்யப்பட்ட மூன்று வெவ்வேறு முறைப்பாடுகளை அடுத்தே இவர் இன்று கைது செய்யப்பட்டு இன்று மாலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
ஒப்பந்தகாரர் ஒருவரிடம் 20 இலட்சம் கடனாகப் பெற்றுவிட்டு கொடுத்த காசோலைக்கு பணம் வழங்கவில்லை எனவும் காத்தான்குடியைச் சேர்ந்த சட்டத்தரணி நூர்தீன் என்பவரின் காணியை 45 இலட்சம் ரூபாவிற்கு வாங்கிவிட்டுக் கொடுத்த 45 இலட்சம் ரூபாவிற்கான காசோலைக்கு பணம் வழங்கவில்லை எனவும் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த முகமது முஸ்தபா முகமது சஜீத் என்பவரிடம் காணியினை 21 இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா விலைக் வாங்கிவிட்டு கொடுத்த காசோலைக்கு பணம் வழங்கவில்லை எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
.jpg)


.jpg)










