சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போஷாக்கின்மை விழிப்புணர்வூட்டும் பேரணி

எதுவுமில்லை என்ற பூச்சிய மட்டத்தை அடைவோம்' என்ற தொனிப்பொருளில் உலக  செயற்பாட்டு வாரத்தையொட்டி மட்டக்களப்பு-கிரான் பிரதேசத்தில்  பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பேரணியொன்று நடாத்தப்பட்டது.

கடந்தகால போர்ச்சூழலினால் கிழக்கு மாகாணத்தில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு-கிரான் பிரதேசத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போஷாக்கின்மை ஆகியவற்றை முற்றாக இல்லாமல் செய்வதே இந்த செயற்பாட்டின் இலக்கு என தெரிவிக்கப்படுகிறது.
 வேள்ட் விஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் கிரான் பிரதேச திட்ட முகாமையாளர் இந்து றோகாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வி;ல் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்லரன்,கிழக்கு மாகாண விவாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பிரதேச சுகாதார வைத்தியதிகாரி ஆர் ரவிச்சந்திரன் பிரதேச செயலர் கே.தனபாலசுந்தரம்  சுகாதாரத் திணைக்கள   பாடசாலை மாணவர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் இப்பேரணியில் பங்கேற்றனர்.

கிரான் சுற்றுவட்டச் சந்தியிலிருந்து ஆரம்பமான இப்பேரணி பிரதான வீதி வழியாக சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து ரெஜி காலாசார மண்டபத்தை அடைந்தது. அங்கு விஷேட செயலமர்வு நடைபெற்றது.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு பதாதைகளை ஏந்திச்சென்றனர்.
மே மாதம் 4-11 ஆந்திகதிவரை உலக செயற்பாட்டு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் உலகளாவிய ரீதியில் வறுமையைத் தணிப்பதிலும் சிறுவர் மரணங்களைத் தடுப்பதிலும் நாம் ஒரு வியக்கத்தக்க முன்னேற்றத்தைக் கண்டிருக்கின்றோம். இது வாழ்வைப்  பாதுகாக்கும் சுகாதாரப் பணியாளர்களை உள்ளார்ந்த ஈடுபாட்டுடனான சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கக்கூடிய நாளாந்த கருமகர்த்தாக்களாக எமக்குத் தந்துள்ளது. ஆயினும் இச்செயற்பாடு அனைத்து சிறுவர்களையும் அடையக்கூடியதாக விரிவாக்கப்படல் வேண்டும்.

இவ்வருடத்தில் எதிர்கால சந்ததியினரின் வாழ்வைப் பாதிக்கும் அல்லது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் முடிவுகளை எட்டுவதற்காக உலகத் தலைவர்கள் அனைவரும் சந்திக்கவுள்ளனர். வரலாற்றில் முதல் தடவையாக வறுமை மற்றும் சிறுவர்களின் இறப்பு வீதத்தில் பூச்சியமென்ற மட்டத்தை அடைவது சாத்தியமாகவுள்ளது


'உலகளாவிய ரீதியில் அனைத்து கதாநாயகர்களுடனும் இணைந்து நானும் நிற்பேன். எதுவுமில்லை என்ற பூச்சிய மட்டத்தை அடைவதற்காக நாம் ஒன்றிணைந்து அனைத்து தலைவர்களையும் அழைப்போம்.' என்ற சத்தியவாக்கும் அங்கு பங்குபற்றுநர்களால் மேற்கொள்ளப்பட்டது.