ஐ.நா. குடியிருப்பு மாநாட்டில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட் முகாமையாளர் கலந்து கொண்டார்

கென்னியாவின் நைரோபி நகரில் கடந்த மாதம் நடைபெற்ற 25ஆவது ஐக்கிய நாடுகளின் குயிருப்பு மாநாட்டில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் எல்.எஸ்.பலன்சூரிய அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர். 

இக்குழுவில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன், சமுர்த்தி மற்று வீடமைப்பு அமைச்சின் பணிப்பாளர் நந்தினி சமரவிக்கிரம உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர். 

திட்டமிட்ட நகர குடியிருப்பு மற்றும் மக்கள் மீள் குடியேற்றம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இவ்வருடத்துக்கான மாநாட்டில் உலகின் 250 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

இம் மாநாட்டில் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் 50000 வீடமைப்புத்திட்டம் தொர்பில் இலங்கைப்பிரதிநிதிகள் விளக்கமளித்தனர். 

இங்கு உரையாற்றிய தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பலன்சூரிய, புதிய ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் வழிகாட்டலில் நிலைத்து நிற்கக்கூடிய மக்களுக்கான வீடமைப்புச் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். 

இலங்கைக் குழுவினருடன் கென்னியாவுக்கான இலங்கைத் தூதுவர் கிருஸ்ணமூர்த்தியும் இணைந்திருந்தார்.