நிகழ்வின்போது சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளரும் பிரபல சமூக
சேவையாளரும் தொழிலதிபருமானகே.துரைநாயகம் பிரதம அதிதியாகக்
கலந்து கொண்டார். கிழக்கு உதயம் அமைப்பின் உப தலைவரும் ஓய்வு நிலைஅதிபருமான பாவாணர் அக்கரைப்பாக்கியன், பாடசாலை அபிவிருத்திச்
சங்கச் செயலாளர் ம.சுஜிதரன் உள்ளிட்டஆசிரியர்கள் சமூகமட்ட
முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள் நலன்விரும்பிகள், மாணவர்கள் என பலர்
கலந்துகொண்டனர்.
இன்போது வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரை கற்றுவரும் நூற்றுக்குமேற்பட்ட மாணவர்களுக்கு புத்தகப் பை, அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள்
வழங்கப்பட்டன.
இன்போது உரையாற்றிய சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளரும் பிரபல சமூக சேவையாளரும்தொழிலதிபருமான கே.துரைநாயகம்
குறிப்பிடுகையில், இந்த பாடசாலைச் சூழலைப் பார்க்கின்றபோது
மிகவும்பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.
இவ்வாறான மாணவர்களுக்கு உதவி செய்வதற்காகவே நாம் சுவிஸ்
உதயத்தைதோற்றுவித்தோம்.
நாம் செய்கின்ற இவ்வாறான உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் கல்வியில் சிறந்து வாழ்வில்முன்னேற்றம் காண்பதே எமது மகிழ்ச்சியாகும். மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு வெறுமனே அதிபர்ஆசிரியர்கள்
மட்டும் கவனம் செலுத்துதல் போதுமானதல்ல. மாறாக பெற்றோர் பாதுகாவர்களும் மிகுந்த கரிசனைகொண்டு செயற்பட வேண்டும்.
எமது சுவிஸ் உதயம் அமைப்பினரால் வழங்கப்படும் உதவிகள் மூலம் மாணவர்கள் வாழ்வில் உயர்நிலை பெறவேண்டும். ஒருவர் வாழ்வில் உயர் நிலை பெறும்போது அவரிடம் பணிவு இயல்பாகவே வர வேண்டும்.
உடலியல்ரீதியாக ஒருவர் வளர்ந்தால் போதுமானதல்ல. ஆளும்
வளர வேண்டும் அதற்கேற்றால் போல் அவரிடம் அறிவும்வளரவேண்டும்
என்றார்.












