மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மேதின வாகனப் பேரணி


(சிவம்)

புதிய சட்ட திருத்தங்களில் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம் எனும் தலைப்பில்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழில் சங்கத்தினரின் மேதின வாகனப் பேரணி நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள அதன் அலுவலகத்திலிருந்து முச்சக்கர வண்டிகள், உழவு இயந்திரங்கள், மோட்டார் சயிக்கிள்கள் சகிதம் ஆரம்பமான  பேரணி
கூட்டம் நடைபெறும் முறக்கொட்டாங்சேனை ஞான ஒளி விளையாட்டு மைதானம் நோக்கிச் சென்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் அதன் செயலாளர் பூ. பிரசாந்தன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் சகிதம் மட்டக்களப்பு – திருமலை வதி வழியாகச் சென்றது.