யூனியன் அஷ்சுரன்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ ஆளுமை விருத்தி பயிற்சிப் பட்டறை யூனியன் அஷ்சுரன்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைந்து 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

யூனியன் அஷ்சுரன்ஸ் பி.எல்சி நிறுவனத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி கிறீன் ஹாடன் கொட்டேலில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன்,சிறப்பு அதிதியாக யூனியன் அஷ்சுரன்ஸ் பி.எல்.சி நிறுவனத்தின் கிழக்கு வலய முகாமையாளர் எம்.ஜெகவண்ணம் போன்றோர் கலந்து சிறப்பித்தார்.

இப் பயிற்சிப் பட்டறையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் வருகைதந்து கலந்துகொண்டனர்.

இப் பட்டறையில் வளவாளர்களாக, மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் ஆரம்ப பிரிவு பொறுப்பு விரிவுரையாளர் ஏ.ரவீந்திரன் மற்றும் தமிழ் மொழி, நாடகத்துறை விரிவுரையாளர் கலாநிதி.எம்.பி.ரவிச்சந்திரா ஆகியோர் கலந்துகொண்டு தலைமைத்துவம் மற்றும் ஆளுமை விருத்தி பற்றியும் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் முறைகள் பற்றியும் விளக்கங்கள் மற்றும் செயற்பாடுகள் மூலம் பயிற்சிகளை வழங்கினர்.

யூனியன் அஷ்சுரன்ஸ் நிறுவன் மட்டக்களப்பு மாவட்டத்தில், இவ்வாறான பல சமூக சேவை வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக செய்துவருவதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது.