தீயினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து மட்டு. மாநகர சபையினால் தவிர்க்கப்பட்டது

(சித்தேஸ்) மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலையில் வாயுக்கசிவு மூலம் தீ விபத்து ஏற்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபைக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து ஆணையாளர் திரு.மா.உதயகுமார் அவர்களின் உடனடி உத்தரவிற்கமைய மாநகர தீயணைப்புப் பிரிவினரின் துணிச்சலான துரித செயற்பாட்டினால் பாரிய தீவிபத்து ஏற்படாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.