மட்டக்களப்பு அரச திணைக்களங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி நேற்று 24ம் திகதி யூனியன் அஷ்சுரன்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யூனியன் அஷ்சுரன்ஸ் விற்பனை முகாமையாளர் கே.நிஷாந்தன் தலைமையில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய யூனியன்அஷ்சுரன்ஸ் பி.எல்.சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மேற்படி போட்டி நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, யூனியன் அஷ்சுரன்ஸ் கிழக்கு வலய முகாமையாளர் எம்.ஜெகவண்ணன் மற்றும் விசேட அதிதிகளாக யூனியன் அஷ்சுரன்ஸ் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பிரதீப் வசந்,யூனியன் அஷ்சுரன்ஸ் தலைமை அலுவலக சந்தைப்படுத்தல் முகாமையாளர் கீர்த்தி முனசிங்க போன்றோர் கலந்துகொண்டனர்.
இப் போட்டியில் முதலாம் இடத்தினை மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக அணியினரும், இரண்டாம் இடத்தினை மட்டக்களப்பு மாவட்ட செயலக அணியினரும் மற்றும் மூன்றாவது இடத்தினை மட்டக்களப்பு மாநகர சபை அணியினரும் பெற்றுக்கொண்டனர்.
வெற்றிபெற்ற அணியினருக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.












