படுவான்கரையில் முதன்முதலாக நடைபெறும் பிரமாண்டமான களியாட்ட நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு

(படுவான் பாலகன்) உக்டா நிறுவனத்தின் ஏற்பாட்டில் படுவான்கரையில் முதன்முதலாக நடைபெறும் பிரமாண்டமான களியாட்ட நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு இன்று(15) வெள்ளிக்கிழமை உக்டா சமூகவள நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வினை வைபவ ரீதியாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சத்தியாநந்தி நமசிவாயம் திறந்து வைத்து ஆரம்பித்து வைத்தார்.

உக்டா நிறுவன தலைவர் இ.குகநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சத்தியாநந்தி நமசிவாயம், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், வேள்ட்விஸன் நிறுவன பட்டிப்பளை ADP திட்ட முகாமையாளர் ஜி.ஜே.அனுராஜ், திட்ட இணைப்பாளர்கள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இக் களியாட்ட நிகழ்வானது இன்று, நாளை , நாளைமறுதினம்(15,16,17) ஆகிய தினங்களிலும் சிறப்பாக இடம்பெற இருக்கின்றது.