(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்ககையில் வீதியால் வந்த அரவம் தீண்டியதில் செல்வரெட்ணம் தமிழ்ப்பிரதி என்ற 25 வயதான யுவதி மயக்கமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஈச்சியலம்பற்றில் செவ்வாய்க்கிழமை அந்திக் கருக்கல் வேளையில் வீதியால் நடந்து சென்று கொண்டிருக்கும் போது விசப்பாம்பு தீண்டியுள்ளது.
வீட்டுக்குச் செல்லும்போது மயக்கமடைந்த அவர் உடனடியாக வெருகல் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அம்பியுலன்ஸ் வண்டி மூலம் திருகோணமலை வைத்;தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தற்சமயம் அவரின் உடல் நிலை தேறியிருப்பதாகவும் உயிராபத்தைக் கடந்திருப்பதாகவும் வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்ககையில் வீதியால் வந்த அரவம் தீண்டியதில் செல்வரெட்ணம் தமிழ்ப்பிரதி என்ற 25 வயதான யுவதி மயக்கமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஈச்சியலம்பற்றில் செவ்வாய்க்கிழமை அந்திக் கருக்கல் வேளையில் வீதியால் நடந்து சென்று கொண்டிருக்கும் போது விசப்பாம்பு தீண்டியுள்ளது.