(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
சிறுவர்களுக்கேற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்கான சமூக மட்ட செயற்றிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டம் 2 வது பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.எம். திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், போக்குவரத்துப் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பயிற்சிப் பாடசாலையில் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.
பாதை ஒழுங்கு விதிகள் மற்றும் சிறுவர்களால் அனுசரிக்கப்பட வேண்டிய போதனைகளை வினைத்திறனுள்ள மட்டத்தில் விஸ்தரிப்பது குறித்து இங்கு ஆராயப்பட்டது.
அங்கு வீதி விபத்து நிலைமைகள் சமூகக் காரணிகள் பற்றி விளக்கமளித்த மட்டக்களப்பு மாவட்டம் 2 வது பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.எம். திஸாநாயக்க கூறியதாவது,
இலங்கையில் பொதுவாக பாதை நடைமுறைகளை வளர்ந்தோர் சிறியோர் எவருமே பின்பற்றாததால் நாளாந்தம் அதிக விபத்துக்கள் சம்பவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.
வீதியருகில் நடக்கும் போது எதிரே வரும் வாகனங்களும் இன்னபிற போக்கு வரத்துச் சாதனங்களும் கண்ணுக்குத் தெரியும் படியாக நடந்து செல்வதே அறிவார்ந்ததும் சட்டரீதியான பயணமுமாகும். அதற்காக நடைப்பயணிகள் பாதையில் தமது வலப் பக்கத்தைப் பயன்படுத்த வேண்டும்.
ஆனால், இலங்கையில் இந்த பாதை ஒழுங்கு முறையை பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை.' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே, இது குறித்து முதலில் பாடசாலைச் சமூகத்திற்கு அறிவூட்ட வேண்டும் என்ற முடிவு இந்தக் கருத்தரங்கில் எட்டப்பட்டது.
அதற்கமைவாக பாடசாலை மட்டத்திலிருந்து ஆசிரியர்களும் மாணவர்களும் பயிற்றுவிக்கப்படவுள்ளார்கள்.
சிறுவர் விபத்துக்களைக் குறைக்கும் சமூக மட்டத்திலான இந்த செயற் திட்டத்தை யுனிசெப் நிறுவனமும் சர்வோதய இயக்கமும் அமுலாக்கம் செய்யவுள்ளதாக சர்வோதய இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல். அப்துல் கரீம் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அபிவிருத்திக்கான ஒன்றிணைவு திட்டத்தின் கீழ் இச் செயல் திட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் அதிகாரி எச்.டி.பி.கே. ஹெற்றியாராச்சி, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகள், சர்வோதய இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல். அப்துல் கரீம், யுனிசெப் நிறுவனப் பிரதிநிதிகள். சர்வோதய சிறுவர் பாதுகாப்பு கண்காணிப்பு வெளிக்கள இணைப்பு உத்தியோகத்தர் பத்மா சந்திரகுமார், மற்றும் சர்வோதய அலுவலர்களும் கலந்து கொண்டனர்.