கொழும்பு நகரிலுள்ள உணவகங்களில் 40 வீதமானவை தரமற்றவையாகும் என கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.தரமற்ற உணவகங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார்.
அத்துடன், தரமற்ற உணவகங்களைக் கண்டறிவதற்கான திடீர் சோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நாள் கடந்த நிலையிலுள்ள உணவுகளை சூடேற்றி மீண்டும் விற்பனை செய்தமை காரணமாக, கொழும்பு பொது நூலக உணவகத்திற்கு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நேற்று சீல் வைக்கப்பட்டது.













