உலக தாதியர் தின நிகழ்வுகள் - 2015
உலகளாவிய ரீதியில் மே 12ம் திகதி கொண்டாடப்படுகின்ற உலகத் தாதியர் தின நினைவுகூரல் நிகழ்வானது எமது நுசுநுநுனுழு தொழிற்பயிற்சி நிறுவனத்தின் உதவித்தாதிய மாணவர்களால் மே மாதம் 21, 2015 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக, EREEDO தொழிற்பயிற்சி நிறுவனத்தின் ஸ்தாபகரும், பணிப்பாளருமாகிய T.மயூரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதிகளாக ஆசிரியர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர். காலை 10 மணிக்கு ஆரம்பமாகி இறுதி நிகழ்வாக உதவித்தாதிய மாணவர்களின் சத்தியவாக்கு நிகழ்வுடன் இனிதே நிறைவுற்றது.



















