'Easy Cash' மூலம் பண மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பலினால் கல்முனையில் கணக்காளர் ஒருவர் ஏமாற்றப்பட்டு 30 ஆயிரம் ரூபா பணத்தை
பறிகொடுத்துள்ளதாக கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்
பட்டுள்ளது.
குறித்த கணக்காளருக்கு வெள்ளிக்கிழமை தொலை பேசி
இலக்கமொன்றிலிருந்து அழைப்பு கிடைக்கப் பெற்றதாகவும்,
தனக்கு 15 இலட்சம் ரூபா பணப் பரிசு கிடைக்கவிருப்பதாகவும் இப்பணத்தைப் பெறுவதற்கு உடனடியாக காப்புறுதிப் பணமாக 30ஆயிரம் ரூபா வைப்பீடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதனை நம்பி கணக்காளர் 30 ஆயிரம் ரூபா பணத்தையும் செலு த்தியுள்ளார்.
அதைத்தொடர்ந்து பரிசுப் பணத்தைப் பெறுவதற்கு தனக்கு வந்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தியபோது அது தவறான இலக்கம் என அறிவிக்கப்பட்டதாக கணக்காளர் பொலிஸில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள் ளார்.
ஈஸி Cash மூலம் பண மோசடி இடம் பெறுவதாக கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மக்களை தெளிவுபடுத்தும் வகையில் கல்முனை பிரதேசத் தில் உள்ள பாடசாலைகள், மத வழிபாட்டுத்தலங்கள், சிவில் பாது
காப்பு உறுப்பினர்கள் ஆகியோரு க்கும் துண்டுப் பிரசுரங்கள் மூலம்
அறிவுறுத்தல் ஏற்கனவே விடுக் கப்பட்ட நிலையில் குறித்த கணக்
காளர் மிக நுட்பமாக ஏமாற்றப் பட்டுள்ளார் எனவும் மிக அவதானத்துடன் மக்கள் செயற்படவே ண்டும் எனவும் கல்முனை பொ லிஸ் நிலையப் பொறு ப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ, கப்பார் மக்களைக் கேட்டுள்ளார்.













