மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின ஊர்வலப் பேரணி


(சிவம்)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின ஊர்வலப் பேரணி மட்டக்களப்பில்  இன்று (01) இடம்பெற்றது.

 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தலைமையில் கல்லடி மணிக்ககூட்டுக் கோபுரத்திலிருந்து ஆரம்பமான வாகன ஊர்த்தியுடனான ஊர்வலம் கூட்டம் நடைபெறும் துளசி மண்டபம் வரை சென்றது.


தடைகளைத் தாண்டி விதைகளை விதைப்போம் எனும் தொனிப்பொருளில் ஆரம்பமான இக்கூட்டத்தில்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமனற உறுப்பினர்களான பா. அரியநேத்திரன், சீ. யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபையின் காணி அமைச்சர் ரி. துரைராஜசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், இந்திரகுமார் பிரசன்னா, ஞா. கிருஷ்ணபிள்ளை, மா. நடராஜா, ஆர். துரைரத்தினம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.