சுவிஸ் உதயம் அமைப்பின் 11வது ஆண்டு நிறைவு விழா

(எம்.ஏ.றமீஸ்)

சுவிஸ் உதயம் அமைப்பின் 11வது ஆண்டு நிறைவு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் நாட்டில் நடைபெற்றது.

சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் தேவசகாயம் சுதர்சன் தலைமையில்  சூரிச் இல்   இடம்பெற்ற இந் நிகழ்வின்போது பல்வேறு விடயங்கள் மேடையேறற்றப்பட்டதுடன், சுவிஸ் உதயம் அமைப்பின் கடந்த பதினொரு வருட காலச் செயற்பாடுகள் பற்றிய விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் எதிர்வரும் காலங்களில் இவ் அமைப்பின் மூலம் இலங்கையின் கிழக்கு மாகாண மக்களுக்கென மேற்கொள்ளப்படவேண்டிய பல்வேறான விடயங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டன.


இவ் வைபவத்தின் போது பல்வேறான கலை கலாசார தமிழர் பண்பாட்டு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன், மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் இலங்கையிலிருந்து  வருகை தந்த மாணவர் மீட்புப் பேரவையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.கணேஷ் மற்றும் பிரான்ஸிலிருந்து வருகை தந்த பாடும் மீன்கள் அமைப்பின் பணிப்பாளர்கள் சாரங்கன், செல்வம் ஆகியோர்  அதிதிகளாக கலந்து கொண்டனர்.

அத்தோடு சிறந்த சமூக சேவையாளர்கள், கலைஞர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதுடன்  பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட  அதிஷ்ட இலாபச் சீட்டுழுப்பு நடத்தப்பட்டு அதில் அதிஷ்டம் கிட்டியவர்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்களும் உடனுக்குடன் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கமைவாக சீட்டுழப்பின்போது முதலாவது அதிஷ்டசாலியாகத் தெரிவு செய்யப்பட்ட அமிர்தலிங்கம்- winterthur Laptop ஐ பரிசாக வெற்றி கொண்டதுன், இரண்டாவது வெற்றியாளரான முரளி- basel ஒன்றரைப் பவுண் தங்கச் சங்கிலியையும், மூன்றாவது அதிஷ்டசாலியான தர்ஷன்- st.gallan ஒரு பவுண் தங்கச் சங்கிலியினையும், நான்காவது அதிஷ்டசாலியான ராஜன்- bern பெறுமதி மிக்க camera  ஒன்றினையும், ஐந்தாவது அதிஷ்டசாலியான ஜெகதீஷ்- zurich  மற்றும் ஆறாவது அதிஷ்டசாலியான சத்தியன்- bern  ஆகியோர் பெறுமதி மிக்க Tab களைப் பரிசில்களாகப் பெற்றுக் கொண்டனர்.

இதுதவிர சுவிஸ் உதயம் உறவுகளிடையே நடத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோருக்கு பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் இளையராகம் கரோக்கே இன்னிசை நிகழ்ச்சி இடம்பெற்றதுடன் சுவிஸ் உதயம் அமைப்பின் உறவுகள் பல்வேறான கலை கலாசார நிகழ்வுகளில் பங்கு கொண்டு தத்தமது திறமைகளைவெளிப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது