தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உலக தொழிலாளர் தின நிகழ்வு

( ஏ.எச்.ஏ. ஹுஸைன், எஸ்.சதீஷ் )
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உலக தொழிலாளர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை ஞான ஒளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது

 "உழைப்புக்கேற்ற உண்மையான ஊதியம் வழங்கப்படவேன்டும்" எனும் தொனிப்பொருளுக்கமைய இம் மே தின நிகழ்வு இடம்பெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)  தலைமையில்  இடம்பெற்றது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலிருந்து பிரமாண்டமான ஊர்திப் பேரணி ஆரம்பமாகி சுமார் 25 கிலோமீற்றர் தூரம் பயணித்து முறக்கொட்டான்சேனையை சென்றடைந்தனர் .

 இதன்போது, பிரதான பொதுக் கூட்டம், விவசாயிகள் கௌரவிப்பு, தொழிலாளர் தின உரை என்பன இடம்பெற்றன .