திருகோணமலையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடெங்கிலும் உள்ள இளைஞர் கழகங்களுக்கு விளாயாட்டு உபகரணங்கள் வழங்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இளைஞர் கழகங்களுக்கு  இவை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு திருகோணமலை நகரம். சேருவில, ஹோமரன்கடவெல போன்ற பகுதிகளில் சனிக்கிழமை 02.05.2015 நடைபெற்றது.


இதன் பிரதான நிகழ்வு  திருகோணமலை நகரத்தில் ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. பட்டணமும் சூழலும் பிரதேச  செயலாளர் பிரிவில் உள்ள 50 இளைஞர் கழகங்களுக்கு இவை பகிர்ந்தளிக்கப்பட்டது. துடுப்பாட்டம், உதைபந்து ,கரப்பந்து ஆகிய விளையாட்டக்களுக்கான உபகரணங்கள் இக்கழகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் திருகேணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் அ.ஹமித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண  வீதி, நீர்பாசனம், வீடமைப்பு அமைச்சர் ஆரியவதி கலபதி பிரதம அதிதியாகவும், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண பணிப்பாளர் க.தவராசா கௌரவ விருந்தினரகவும்  பட்டணமும் சூழலும் பிரதேச  செயலாளர் அருள்ராஜ் விசேட விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

பட்டணமும் சூழலும், தம்பலகாமம், கிண்ணியா, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுகளில்  இருந்து தலா 5 இளைஞர் கழகங்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கு இடையே மென்பந்து துடுப்பாட்ட போட்டியும் நடத்தப்பட்டது.

லவ்லேனில் அமைக்கப்பட்டுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் 6மாத கால கனணி பயிற்சி பெற்ற 15 பேருக்கும்,  15 தினங்கள் மொழிப்பயிற்சி பெற்ற 50 பேருக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.