இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பிரித்தானியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த 4 பேர் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் இரு தமிழர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சமாலி பெர்னாண்டோ,ரணில் ஜயவர்தன,உமா குமரன்,சொக்கலிங்கம் யோகலிங்கம் ஆகியோரே தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
உமா குமரன் பிரித்தானிய வானொலி நிலையம் ஒன்றில் அறிவிப்பாளராகவும் சமாலி பெர்னாண்டோ சட்டத்தரணியாகவும் கடமையாற்றுகின்றனர்.
சொக்கலிங்கம் யோகலிங்கம் பிரித்தானிய லிபரல் கட்சி சார்பாக போட்டியிடுகின்றார்.
மேலும் இவர் இலங்கையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரணில் ஜயவர்தன பொருளாதார விஞ்ஞானம் தொடர்பில் கல்வி பயின்றிருப்பதோடு பிரித்தானியாவின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலும் தற்கால நிலமை தொடர்பிலும் ஆராய்ந்து வருகிறார்.
 |
| உமா குமரன் |
 |
| சமாலி பெர்னாண்டோ, |
 |
| ரணில் ஜயவர்தன |
 |
| சொக்கலிங்கம் யோகலிங்கம் |