சுகாதாரத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான உபரணங்களும் அங்கிகளும் வழங்கி வைப்பு

(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )
ஏறாவூர் நகர சபையில் பணியாற்றும் சுகாதார தொழிலாளிகளுக்கு அவர்கள் தங்களது உடற்சுகாதாரத்தைப் பேணிக் கொள்வதற்காக  பாதணிகள், கையுறைகள், அங்கிகள் என்பன வியாழக்கிழமை ஐநா நிறுவனமான 'UNOPS' இனால் கையளிக்கப்பட்டது.
23 சுகாதாரத் தொழிலாளிகள் இந்தப் பாதுகாப்பான உபகரங்களையும் அங்கியையும் பெற்றுக் கொண்டார்கள்.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.ஐ.எம். தஸ்லீம், நகரசபைச் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் உட்பட நகரசபையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி  உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
ஐநா வின் யுனொப்ஸ் நிறுவன நிகழ்ச்சித் திட்ட அதிகாரி சிதம்பரப்பிள்ளை சிவக்குமாரன் இவற்றை ஏறாவூர் நகர சபைக்குக் கையளித்தார்.