மே 18 இல் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப் போரில் உயிர் நீத்தவர்களையும் வாகரையில் இறுதி யுத்தத்தின்போது உயிர் நீத்தவர்களையும் நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று திங்கள் கிழமை காலை வாகரை மாணிக்க புரம் கடலேரியில் நினைவு கூறப்பட்டது.இந் நிகழ்வினை தமிழ் தேசிய மக்கள் முன்னனியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளை இழந்து தவிக்கும் உறவுகள் சுடர்களை கண்ணீர் மல்க ஏற்றினர். மலை முரசு ஆசிரியர் இராஜி ஞானேஸ்வரன் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றபோது தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச் செயலாளர்.செ.கஜேந்திரன் அருட் தந்தை பிரபாகர்.ஆகியோர்கள் கலந்து கொண்டு சுடர் ஏற்றி உயர் நீத்த உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

























