(வரதன்,படுவான் பாலகன், சிவா ) கிழக்கிங்கையின் மிகப்பிரசித்தி பெற்றதும், மட்டு மாநகருக்குத் தெற்குத் திசையில், மண்முனை வாவிக்கு அப்பால் பண்டாரியாவெளி (நாககட்டு) எனும்
தொன்மை வாய்ந்த அழகிய கிராமத்தின் மத்தியில் எழுந் தருளியுள்ளதும்,
கலியுகத்து கண்கண்ட தெய்வமாக போற்றப்படுவதும் சைவமக்களால் நீண்ட காலமாகப் பக்தி சிரத்தையோடு பேணி வளர்த்து வருவதுமாகிய ஸ்ரீ நாகதம்பிரான்
ஆலய குடமுழுக்கு பெருஞ்சாந்தி அருட்புனல் நன்னீராட்டு விழா ஜீர்னோத்தாரண
அஸ்டபந்தன பஞ்சகுண்டபஸ் நூதனப் பிரதிஸ்டா மஹா கும்பாபிசேகம் எதிர்வரும்07.06.2015ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இடம்பெறவுள்ளது.
எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு 05.06.2015 காலை 8.00மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் 06.06.2015 அன்று மதியம் 12.00மணிவரை எண்ணெய் காப்பு இடம்பெறும்.
ஆலயத்தின் பெருஞ்சாந்தி வழிபாட்டு நிகழ்வு 03.06.2015ம் திகதி புதன்கிழமை நாளை அதிகாலை ஆரம்பமாகவுள்ளதுடன்.கும்பாபிஷேகக் கிரிஜைகள் விஸ்வ பிரம்மம் எஸ் காந்தன் குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது












