(த.லோகதக்சன்)
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரால் ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜின் 7வது அண்டு நினைவு தினம் செவ்வாய்கிழமை மட்டக்களப்பு தாமரைக்கேணி மங்கையற்கரசியர் மகளீர் இல்லத்தில் இடம்பெற்றது.
பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு இந்து வர்த்தன சங்க உறுப்பினர் எஸ்.சிவபாதசுந்தரம், பேரவை செயலாளர் சா.மதிசுதன், பொருளாளர் நா.புவனசுந்தரம், கிழக்கு இந்து ஒன்றியச் செயலாளர் கதிர் பாரதிதாசன், சைவப்புலவர் திருமதி.எஸ்.ஞானசூரியம், கோட்டமுனை பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.சா.ராமதாஸ் குருக்கள் மற்றும் பேரவை பிரதிநிதிகள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு பொலிஸ் நிலைய அருகில் உள்ள சுவாமி தந்திரதேவா மகராஜின் உருவச்சிலைக்கு மலர் மாலை சூட்டப்பட்டு பூசைகள் இடம்பெற்று பின்னர் நினைவு தின நிகழ்வு மட்டக்களப்பு தாமரைக்கேணி மங்கையற்கரசியர் மகளீர் இல்லத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது பேரவை செயலாளர் சா.மதிசுதன், பொருளாளர் நா.புவனசுந்தரம், கிழக்கு இந்து ஒன்றியச் செயலாளர் கதிர் பாரதிதாசன், சைவப்புலவர் திருமதி.எஸ்.ஞானசூரியம் ஆகியோரால் ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜின் நினைவு உரை நிகழ்த்தப்பட்டது.
இதன்போது கலந்து கொண்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அமெரிக்காவின் வெள்ளை இனத்தில் ஜனனித்து இந்து சமயத்தின் மேன்மையை தமது 19வது வயதில் உணர்ந்து ஒரு இந்துவாக தன்னை உருவாக்கி தான் இந்து சமய வழியில் நடந்ததுடன் எமது இந்து மக்களை இந்திய நாட்டிலும் இலங்கை நாட்டிலும் உண்மையான இந்துவாக வாழ வைப்பதற்காக அயராது உழைத்தவர்.