(சிவம்)புகைத்தல் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு புகைப்பதால் ஏற்படும் தீமைகளை விபரிக்கும் விழிப்புணர்வுப் பேரணி மட்டக்களப்பு நகரில் இன்று வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்றது.
மட்டக்களப்பு தலமையகப் பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணி பொலிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமாகி திருமலை வீதி, சுங்க வீதி வழியாக நகர மண்டபத்தையடைந்து மீண்டும் பொலிஸ் நிலையத்தை வந்தடைந்தது.
புகைப்பதால் ஏற்படும் தீமைகளை விபரிக்கும் பதாதைகளையும் மற்றும் உருவப் படங்களையும் ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் தாங்கிச் சென்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க, மாவட்டத்தில் உள்ள 12 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் அங்கத்தவர்கள், பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.



















