மட்டக்களப்பில் சரத் பொன்சேகாவினால் ஜனநாயகக் கட்சியின் காரியாலயம் திறந்துவைப்பு

(சிவம் ) ஜனநாயகக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் காரியாலயம் திருமலை வீதியில் அதன் தலைவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவினால் இன்று வெள்ளிக்கிழமை (12) திறந்து வைக்கப்பட்டது.

கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபையின் மேயருமான சிவகீதா பிரபாகரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மாவட்ட அமைப்பாளரின் வதிவிடத்தில் அமையப்பெற்ற இவ் அலுவலக திறப்பு விழாவில் நடைபெற்ற நிகழ்வில் அலுவலக நினைவுப் புத்தகத்தில் சரத் பொன்சேகா கையொப்பமிட்டார்.

இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட இணை அமைப்பாளர் எம்.எஸ்.எம். ஷாபீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.