(சிவம்)
மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக விநாயகர் ஆலய பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றது.விநாயகர் வழிபாடு, யாக பூஜை, தூபி அபிஷேகம் என்பன இடம்பெற்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகக் கிரியைகளை சிவஸ்ரீ கருணாகர மகேஸ்வரக்குருக்கள் நிகழ்த்தினார். மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். பாஸ்கரன் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.






















