(சிவம்)மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டங்களுக்கான 14 ஆவது புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரி.பி. சம்சுதீன் பதவியேற்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (19) மட்டக்களப்பு பொலிஸ் வளாகத்தில் நடைபெற்றது.
முதல் நிகழ்வாக புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை nலுத்தப்பட்ட பின்பு பொலிஸ் உயர் அதிகாரிகளின் பதவி மற்றும் பெயர்களைக் கேட்டறியும் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பொலிஸ் அத்தியட்சகர் உபுல் ஜயசிங்க, மாவட்டத்தில் உள்ள 12 பொலிஸ் நிலையங்களின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற இவர் இதற்கு முன்பு நுவரெலியா மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

















